இடுகைகள்

ஆம்புளபுள்ள வேணும் பூவரசமர நிழல் எந்த நேரமும் ஐந்து ஆறு பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் அதன் அருகில் ஓர் கொல்லுப் பட்டரை மிக வேகமாக ஊதிக்கொண்டிருக்கும் ஓர் அம்மா சரசு. கொழுவை காய்ச்சி அடித்துக்கொண்டிருக்கும் அந்த ராமு தான் இந்த கிராமத்தின் முக்கியமான கலப்பை மூட்டிகொடுப்பவர். சற்று தூரல் மழை பெய்தால் உழுது  சாமை, சோளம், கடலை, கம்பு போன்றவை விதைக்க வேண்டும் என்ற ஆவலில் ஒருவர் வந்தார். ஏண்டா ராமு இன்னைக்கு கலப்பை தர்ரேன்னு சொன்ன இன்னும் கலப்பை மூட்டலயா என்றார். அண்ணே இப்ப தான் கலப்பையை செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதோ பாருங்கள் இது உங்கள் கலப்பை தான் முன்புரம் செதுக்கி துளை போட்டு தடியை மாட்டி விட்டேன் முதுகுப்புறம் தான் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். அது சரியா முடிச்சு போலிருக்குது என் வாச்சிக்கு கடினமா உள்ளது. முதுகை செதுக்கியதும் கொழுவை வைத்து தந்து விடுகிறேன் என்றார். நீங்க காலையில் தானே உழுக போவீங்க அதுக்குள்ள முடிச்சுருவேன். பட்டறையில் உங்க கலப்பை கொழு தான் அடித்து வச்சுருக்கேன் இனி மாட்ட வேண்டியது தான். எங்கிருந்தோ ஒரு குரல் என்னடா மாடசாமி உன் பிரச்சனை முடிஞ்சதா,...