ஆம்புளபுள்ள வேணும்

பூவரசமர நிழல் எந்த நேரமும் ஐந்து ஆறு பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் அதன் அருகில் ஓர் கொல்லுப் பட்டரை மிக வேகமாக ஊதிக்கொண்டிருக்கும் ஓர் அம்மா சரசு. கொழுவை காய்ச்சி அடித்துக்கொண்டிருக்கும் அந்த ராமு தான் இந்த கிராமத்தின் முக்கியமான கலப்பை மூட்டிகொடுப்பவர். சற்று தூரல் மழை பெய்தால் உழுது  சாமை, சோளம், கடலை, கம்பு போன்றவை விதைக்க வேண்டும் என்ற ஆவலில் ஒருவர் வந்தார்.
ஏண்டா ராமு இன்னைக்கு கலப்பை தர்ரேன்னு சொன்ன இன்னும் கலப்பை மூட்டலயா என்றார்.
அண்ணே இப்ப தான் கலப்பையை செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதோ பாருங்கள் இது உங்கள் கலப்பை தான் முன்புரம் செதுக்கி துளை போட்டு தடியை மாட்டி விட்டேன் முதுகுப்புறம் தான் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். அது சரியா முடிச்சு போலிருக்குது என் வாச்சிக்கு கடினமா உள்ளது. முதுகை செதுக்கியதும் கொழுவை வைத்து தந்து விடுகிறேன் என்றார்.
நீங்க காலையில் தானே உழுக போவீங்க அதுக்குள்ள முடிச்சுருவேன். பட்டறையில் உங்க கலப்பை கொழு தான் அடித்து வச்சுருக்கேன் இனி மாட்ட வேண்டியது தான்.
எங்கிருந்தோ ஒரு குரல் என்னடா மாடசாமி உன் பிரச்சனை முடிஞ்சதா, நேத்து நேத்து கூட்டமா ஆளுங்கள கூப்புட்டுகிட்டு போன என்ன ஆச்சு.
ஒன்னும் இல்லைனே அது நம்ம தம்பிகிட்ட கடன் வாங்கினேன் அது வட்டி எல்லாம் சேத்து ரெண்டு மடங்காயிருச்சு அதான் அவன் சண்டைக்கு வந்தான். நம்ம ஊர்காரங்க பேசி இந்த மாகசூல்ல குடுக்கனும் அப்டி இல்லைனா அடுத்த மகசூலுக்கு அவன் உழுவான் அப்டினு  நம்ம ஊர்காரங்கள வச்சு பேசி முடிச்சோம். மழை பெய்யும்னு நம்பி இந்த மகசூலில் குடுத்துரலாம், இந்த மகசூலில் குடுத்துரலாம்ன்னு வருசம் தான் தள்ளி போச்சு கடன குடுக்க முடியல, பலத்த காத்து உழுது சால் போட்டதும் காத்து அடிச்சு விதை முழுசும் அடுத்த காட்டுக்கு கொண்டு போகுது, மழை பெய்யல வாங்குன கடன குடுக்க முடியலை,
ஏன் அரசாங்கத்தில் கடன் தர்ரதா சொன்னாங்களே,
ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் ஆனால் பட்ட கடனுக்கு கொடுத்து விட்டேன் நான் என்ன செய்ய,
சரி சரி கலப்பையை வாங்கி இந்த தடவையாவது உழு… கடவுள் காப்பான்.
இந்த காடு உன் பாரம்பரை சொத்து
சரிங்கன்னே
நிழலில் உட்கார்ந்தவர்கள் ராமு… இன்றுமா கலப்ப மூட்டுற .. இந்த ஈரம் போச்சுன்னா… அப்பறம் எப்ப மழை பெஞ்சு உழுகிறது.
கலப்பையை காலையில் தந்துருவேன் என்றார் ராமு
அந்த கிராமத்தில் மொத்தமே நூறு வீட்டுக்கும் குறைவு தான் அவர்களில் ஒரு சிலர் தான் வேறு வேலை பார்ப்பவர்கள் மற்ற எல்லாரும் விவசாயம் தான் அனேகமாக எல்லோருமே ராமுவிடம் தான் அலப்பை செய்து உழவேண்டும்.
ராமுக்கு ஒரே மகள் அவளும் காட்டு வேலைக்குத்தான் போவாள் சின்ன வயசு, இன்னும் திருமணம் ஆகவில்லை இவருக்கு சின்ன காடு அதையும் இவர் உழுவதில்லை, வருடத்திற்கு இவ்வளவு சோளம் அல்லது எந்த மகசூல் வருகிறதோ அதில் பாதி கொடுங்கள் என்று கூறி ஒருவருக்கு காட்டை கொடுத்திருக்கிறார்.
கலப்பை மூட்டுவதில் வரும் வருமானம் தான், வீட்டில் ஒரு பசு, பட்டறை முன் கட்டியிருக்கும் ஆடுகள் வீட்டில் கட்டிவைத்திருப்பார்கள்.
இவர்களின் வாழ்கை இவ்வளவு தான் சரசு தான் இவரது மனைவி காட்டு வேலைக்கு போவாள், கலப்பை மூட்டும் போது பட்டறையில் துருத்தியை வைத்து காற்று ஊதுவாள்.
பூவரச மர நிழலில் உட்கார்ந்திருப்பாவர்கள் யாரும் சும்மா இருப்பதில்லை எந்த நேரமும் பேசிக்கொடிருப்பவர்கள்…
ஊர் கதை, அரசியல், அடுத்த வீட்டில் நடப்பது இதுதான் அவர்களின் பொழுதுபோக்கு.
ராமு கலப்பையை சாய்த்து வைத்துக்கொண்டு அண்ணே கருப்பையா, கொஞ்சம் பிடிச்சுக்கங்க இந்த கலப்பை முதுகு கொஞ்சம் தான் இருக்கு செதுக்கி விடுகிறேன் என்றார்.
சரி டா… என்று ஒருபுறம் பிடித்துக்கொண்டார் மறுபுறம் வாச்சியால் செதுக்கிகொண்டிந்தார்.
ஏண்டா என்ற குரல், என்னம்மா என்றார் ராமு, அது இன்னமோ பக்கத்து ஊர்ள யாரோ போய்டாங்களாம் என்றார்.
எனக்கு தெரியாது நான் கலப்பயை செதுக்கிகொண்டிருக்கிறேன் அவசரம் வேற… நான் எங்க போறது.
சரி … சரி… நான் கேள்விப்பட்டேன் அதுதான் மாரிச்சாமி தான் போய்ட்டார் என்றார்.
ஐயோ, நான் ஒரு வாரத்துக்கு முன்னதான் பார்த்தேன். அங்கே கெடக்குதே அது அவர் கலப்பை தான். நாளைக்கு அதை மூட்டி கொடுக்கலாம்னு நினைச்சேன். நீங்க இப்படி சொல்ரீங்க…
அட நீ வேற, நேத்து காலையில் அவர் காபி கடைக்கு வந்து காபி குடிச்சுட்டு போயிருக்காரு அப்புறமா சொல்லுரையே..
எப்படி சீக்கு போக்கு இல்லாம திடீர்னு போய்ட்டாரு,
அதுவா…. கொஞ்சம் மனம் வருந்தும்படி தான் இருக்கு,
அவருக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன் அவன் எதுக்கும் உதவமாட்டான் நோயாளி…. அதுனாலயே போன வருசம் அவன் போய்ட்டான்.
அவன் மனைவி மூனு மாசத்துக்கு முன் போய்ட்டா அவர் பாவம் தனியா தான் ரெண்டு பொண்ணுங்களோட இருந்தாரு
சொந்தகார பையங்களுக்கு இரண்டு பெண்களையும் கட்டி கொடுத்துட்டாரு… அவர் எங்க போவாரு
அந்த வீட்டுல தான் இருந்தாரு
விவசாயம் தான் அவருக்கு வருமானம் எல்லா பூமியும் வானம் பார்த்த பூமி… மழை பெய்தால்தான் மகசூல் அதை நம்பிதான் வாழ்க்கை…
வயசாச்சு நீங்க ஏன் கஷ்டப்படனும்னு மருமகன்கள் கூறியவுடன்… சரி அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று தன் கடனையும், விவசாயத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இவர் அவர்களோடு தான் இருந்தார். இவருக்கு மாட்டுத்தாரகுபார்ப்பார் அதில் சில நேரங்களில் வருமானம் வரும், சில நேரங்களில் ஒன்னும் கிடைக்காது. அதுதான் அவரது தொழில்
மருமகள்கள் விவசாயம் பார்த்து அவர் பட்ட கடனை அடைக்கலை… இவர் கேட்டிருக்கிறார்….. மகசூல் வருவதே கடன் அடச்சா என்ன ? அவர்கள் என்ன கேட்கிறார்களே. என்றார்..
என்ன மாமா நாங்க என்ன இலவசமாவா சப்பிடுறோம். பாடுபட்டா தான் கஞ்சி, அதுவும் இந்த வருடம் மழை வேற இல்ல, கடன் கடன்னா எப்படி கட்டுறது என்று இருவரும் கூறியதும்.. இவருக்கு மனசு மிகவும் கஷ்டமா இருந்தது.
கடன் அடைக்கனும்னா நீங்க சாப்பிட்டதுக்கு பணத்தை கொடுங்க…
பின்…. நாங்க என்ன சொல்ல…. என்று சத்தம் போட்டங்க
மிகவும் நெருக்கமான சொந்தம் என்று தான் பெண்களை கட்டிக் கொடுத்தார்….
இவர்கள் இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது …..
ஊரில் அவர் நல்ல பெயர் எடுத்தவர்…..
ஒரு நாள் மகளிடம் ….. அம்மா ரொம்ப பசிக்குது கொஞ்சம் கஞ்சி ஊத்து என்றதும்… அப்பனுக்கு என்ன ஆயிற்று
கும்பாவில் சோளச் சோறு வைத்து தயிர் ஊற்றி வெங்காயம் தந்தால்
அவர் அப்பொழுது தான் பிசைந்து கொண்டிருந்தார்…
மருமகன் …. வீட்டில் நுழைந்தார்.. இவர் சாபிடுவதை பார்த்தான்…
ஏண்டி உங்கப்பனுக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கஞ்சி ஊத்துற எந்த மம்பட்டி வேலைபாத்து களிச்சு போய்ட்டாரு…..
இந்த வீட்டுள உனக்கு நான் புருஷனா….. இவர் புருஷனா .. இவ்வளவு சீக்கிரமா கஞ்சி ஊத்துர என்றார்… உரத்த குரலில்….
அந்த பெரிய மனிதர் அப்படியே ஏற இறங்க பார்த்தார் … மருமகனை…
எழுத்து வெளியே வந்து …. காட்டில் ஒரு சின்ன குடிசை இருக்கும் … காவக்காரங்க பார்த்துக்கொள்ளும் போது இதில் வந்து கொஞ்சம் நேரம் படுப்பார்கள்
பெரியவர் வேகமாக அந்த குடிசைக்குள் சென்று படுத்துக்கொண்டார்.
யாரும் தேடுவார் இல்லை….
இன்னைக்கு காலையில் தான் காவக்காரன் பார்த்து மகளிடம் கூறியிருக்கிறான்..
என்ன செய்ய ஒரு மகன் இருந்தா இவர் இப்படி கஷ்டப்பட வேண்டியது இருக்காது…..
என்ன இருந்தாலும் அடுத்தவர் மகன் தானே….. என்ன ரத்த பாசம் இருக்கப் போகுது என்று கூறினார்….
அப்போ ராமுக்கு என்ன சொல்வதென்று தெரியலை…
தானும் ஒரு மகள் வைத்துள்ளோம். அவளை கொடுத்துட்டா அவளை கட்டுரவன் நமக்கு உதவுவான் என்று சொல்ல முடியுமா.. முடியாது என்று நினைத்துக் கொண்டே கலப்பையில் முதுகை செதுக்கி முடித்தார்.
ஏன் அண்ணே ! ஆம்பளப்புள்ள இருந்தாத்தேன் நல்லதா ? எனக்கு என்னமோ … ஒரு புள்ள அவளும் புருஷன் பெச்சுக் கேட்டாள் ! என் கதி என்ன ஆவது.
எனக்கு பிள்ளை பிறந்து 13 வருசமாச்சு இனியும் ஆம்பளப்புள்ள பிறக்குமா…
கூட்டத்திலிருந்த ஒருத்தர்…. அவர் தான் ராமசாமி … என்னடா இந்த காலத்தில் பட்டணத்திக்கு போனா எவ்வளவு மருத்துவ வசதி இருக்கு ஒரு நல்ல டாக்டரை பார்த்து கேளேன் என்றாள்
ராமுக்கு தூக்கம் வரல….. பிறண்டு பிறண்டு படுத்துக் கொண்டிருந்தார்…
என்ன மாமா…… என்றாள் சரசு….
இல்ல…. நமக்கு ஒரு ஆம்பளப்புள்ள இருந்தா….. நமக்கு நல்ல மதிப்பிருக்கும் நம தாழ்ந்த காலத்தில் நம்மையும் பாத்துக்குவான் என்றார்
மாமா பேராசை வேண்டாம்…
நமக்கு…. சின்னக்காடு இருக்கு தானியம் இருக்கு பருப்பு வகை இருக்கு ஆடு கோழி கூட இருக்கு……
நம்ம கலப்பை மூட்டுறதுல தானியம் வருது… நிம்மதியா வாழ்ந்த போதும் இல்லாததை நினைச்சு வருத்தப்படுரதை நிருத்துங்க மாமா… என்றார் சரசு…
சரி… பட்டிணத்தில் இருக்கிற டாக்டரை பார்ப்போம்….. அப்புறம் விதி போல நடக்கட்டும் … என்றார் ராமு.
ராமுவும் சரசுவும் பட்டணம் அதாவது தேனிக்கு போனார்காள்…
குழந்தை பேரு வேணூமா அனுகவும் பஸ் ஸ்டாண்டில் ஒரு விளம்பரத்தை சரசு படித்தாள்….. அந்த மருத்துவமனை விலாசமும் இருந்தது.
ராமுக்கு படிக்க தெரியாது சரசு தான் எழுத்துக்கூட்டி படிப்பாள்…. சரி போகலாம் என்று ஆஸ்பத்திரிக்கு நடந்தார்கள். இருக்கும் இடம் சரியா தெரியாததால் கேட்டு கேட்டு சென்றார்கள். ஒரு பையன் மாதிரி இருக்கான் இவன் கிட்ட எப்படி கேக்குறது என்று யோசனை வேறு…
டாக்டர் வருவாரா … என்றார்  ராமு
பையன்…. வருவார் கொஞ்சம் உகாருங்க என்று அமர செய்தான்…. நேரம் .. போய்கொன்டே இருந்தது..
தம்பி ஊருக்கு போகனும் … நேறமாகுது…. வேலை வேற அப்படியே விட்டுட்டு வந்துடேன்…. என்றார் ராமு
ஐயா … அவர் இந்த நேரம் வந்து இருக்கனும் … தெரியலை கொஞ்சம் உட்காருங்க என்றான்…
ராமுவுக்கு உட்கார பிடிக்கலை… சரி நாளைக்கு வர்ரோம்… என்றார் ராமு.
நீங்க என்ன பிரச்சனைனு சொல்லுங்க  டாக்டர் கிட்ட சொல்லுரேன் என்றார் பையன்…..
தம்பி அது டாக்டர் கிட்டத்தான் சொல்லனும்னு சொல்லி வெளியே வந்தார்.
அருகில் உள்ள மருந்துக் கடைகாரன் என்னங்க அந்த பையன் டாக்டர் கிட்ட சொல்லி மாத்திரை மருந்து வாங்கித்தருவான். நீங்க டாக்டர் இருந்தால் இவனிடம் தான் சொல்ல சொல்வாரு.. என்று கூறியதும்
ராமு அவன் அருகில் சென்று … குழந்தை வேணும் அதுதான் என்றார்..
அய்யா நான் டாக்டரிடம் சொல்லி கேட்கிறேன் எண்றான்.
சிறிது நேரம் கழித்து ஐயா, நான் கேட்டேன் நீங்க நாளைக்கு வங்க உங்களுக்கு ஒரு சில சோதனை செய்யனுமாம் அதன் பின் தான் டாக்டர் என்ன செய்யலாம்னு சொல்லுவார் நீங்க நாளைக்கு வங்க …
ராமு வேகமாக புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்..
மாடசாமி வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்…. ஒரு கூட்டமே பூவரச மரத்தில் இருந்து…
ஏண்டா ராமு எங்க போன… கலப்பை என்னாச்சு.. உன்னை நம்புனா காட்டை பறிகொடுக்க வேண்டியது தான் என்று சத்தம் போட்டார் மாடசாமி.
ராமுக்கு என்ன சொல்லுவதுனு தெரியலை
நீங்க வீட்டுக்கு போங்க .. இப்பதர்ரேன் கலப்பயை என்று கெஞ்சினேன்.
கூட்டத்திலிருந்தவர்கள்… ராமுக்கு என்ன ஆச்சு காலையில் போனவன் இப்ப தான் வர்ரான்….
என்ன ராமு என்ன ராமு என்று மாறி மாறி  கேள்வி கேட்டார்கள்… ராமுக்கு பதில் சொல்ல வெக்கப்பட்டதால் புண்சிப்புடன்…
சரசு…. பட்டறையை போடு கொழுவை வைத்து இப்பவே கலப்பயை கொடுத்துரலம்னு வேகமாக சொல்ல  சரசுவும் எதுவும் சொல்லமல் தீ மூட்டி பட்டறை தயார் செய்தாள்.
ராமு வேகமாக கொழுவை காச்சி காம்புவை செய்து கொண்டியை கலப்பையில் வைத்து அரைந்து கொழுவை மாட்டினார் கலப்பையை எடுத்துப்போங்க என்றார். ராமு
மாடசாமியும் மற்றவர்களும் எதுவும் சொல்லாமல் கலப்பையை எடுத்து சென்றனர்
கூட்டத்தில் உள்ள ராமசாமி … சரசு நீயும் புஷனும் எங்க போனீங்க எங்ககிட்ட சொல்லக் கூடாதா என்றார்.
இல்லைங்க … சொந்தகாரங்க வீட்டுக்கு போனோம் என்றாள்.
சரசுக்கு உண்மையை சொல்ல வெக்கப்பட்டதால் மறைத்து பேசினால்.
விடிந்தது தான் தாமதம் வேகமாக பட்டினம் நோக்கி ராமுவும் சரசும் புறப்பட்டனர்
ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்….
டாக்டர்… ஐயா.. நீங்க நேத்து வந்தீங்களா
ஆமாங்க… சில சோதனைகள் இருக்கு என்று கூறினார்
சரிங்க சார்…
முதலில் இரத்தபரிசோதனை அதன் பின் மற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டும்… மாலையில் தான்… என்ன முடிவு என்பது தெரியும் என்றார்.
நீங்க அந்த ரூம்ள இருங்க … வர்றேன் என்றார் டாக்டர்
நர்ஸ்… அந்த ஐயாவுக்கு செய்ய வேண்டிய சோதனைக்கு வேண்டிய ரத்தம் மற்றவற்றை கொண்டு வா… என்றார்
சிறிது நேரம் கழித்து…
ஐயா … சோதனைக்கு வேண்டியவற்றை நீங்கள் இருவரும் தரவேண்டும் என்றார்… இருவரும் தந்தனர்….
மறுநாள் வாங்க…. முடிவை சொல்லுகிறேன் என்றார் டாக்டர்.
ராமுவும் சரசும் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதற்குள் கலப்பை வேண்டி கூட்டமாக வந்தனர்
ஐயா… இன்னைக்கு தர்றேன் என்று கூறியதும் போய்விட்டனர்
மாலை நேரமாதலால்… கலப்பையை வேகமாக மூட்டிக் கொண்டிருந்தார் மறுநாள் வேகமாக … பட்டினத்திற்கு போனார்கள்.
ஆஸ்பத்திரியை அடைந்தவுடன்…
டாக்டர் ….. முதலில் உங்கள் இருவருக்கும் உடல் பலகீனமாக இருக்கு…. மருந்து மாத்திரையை சாப்பிடுங்க பின்னால் என்ன செய்யலாம்னு யோசிப்போம் என்றார் டாக்டர்….
ராமு … தன் சொந்த கிராமத்திற்கு ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய மருந்து மாத்திரைகளை வைத்து கொண்டு வந்தார்
டாக்டர்.. தினமும் காலை , மாலையில் என்ன என்ன மருந்து மாத்திரைகள் சப்பிடவேண்டும் என்று சொல்லி அனுப்பினார்…
ராமுவுக்கு…. இதென்ன மாத்திரை மருந்து என்று தினமும் சாப்பிட ஆரம்பித்தார் ஆனால் மூன்று வேளைக்கு நான்கு வேளையாக சாப்பிட்டார்….
ஒரு நாள்… இரவு ஜாமத்தில் வயிறு வலிக்க ஆரம்பித்தது. சரசு…… வயிறு வலி அதிகமாக இருக்கு என்று கத்தினார்.
சரசுவுக்கு ஜாமத்தில் என்ன செய்வதென்று தெரியவிலை … வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு சென்று அக்கா என் வீட்டுகாரருக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கு மாட்டு வண்டியில் அழைச்சிட்டு போகலம் என்றார்.
மாமா … சரசு புருஷனுக்கு வயிற்று வலி வயிறு வீங்கிகிட்டே இருக்கம். மாட்டு வண்டியை பூட்டு போகலாம். என்றார்.
சரசும்… ரமுவும் மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்கள்… போக போக வயிரு அதிகமாக வீங்கியது.
ஆஸ்பத்திரு வந்தடைந்ததும் ராமுவுக்கு என்ன பேசலை… அனத்தல ந்னு திரும்பிப் பார்த்தார் மாட்டு வாண்டிக்காரர். டாக்டர் கொஞ்சம் பாருங்க என்றார்
அவர் பத்து நிமிடம் பார்த்துட்டு வீட்டுக்கு தூக்கிட்டு போங்க என்றார்..
ஊர் கூடியது …. ராமுவுக்கு என்ன என்ற கேள்வி
காலை நேரமாயிற்றே.. என்ன வண்டி வருது  என்று ஆவலோடு பார்த்தனர்..
ராமுவின் மகல் தனியாக அழுது கொண்டிருந்தாள்.
காலையில் ராமுவின் வீட்டுப்பக்கம் போனவர்கள் அழுகை சத்தம் கேட்டு என்ன என்று கேட்டனர்.
அப்பாவுக்கு வயிற்று வலி வீக்கம் வேறு பட்டணத்திற்கு நேத்துப் போனாங்க என்றாள்
ஊர் மக்களுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது… ராமு பட்டினத்திற்கு வைத்தியத்திற்கு போனான் என்று..
ஒரு மாட்டு வண்டி ராமு வீட்டு முன் நின்றது.
கூட்டட்தில் இருந்தவர்கள்… கீழே இறக்கி படுக்க வைத்தனர் மாலையை போட்டு ஊர்க்காரர்கள் …. சொந்தபந்தங்கள் அழுது கொண்டிருந்தது
மாமா…. ஆம்புளபுள்ள…. ஆம்புளபுள்ள…. வேனும்னு போன இருந்த காடு… வீட்டிலுள்ள சோளம்…. கம்பு….. பருப்பெல்லாம் போச்சு

உன் பேச்சுக் கேட்டு…. என் உடம்பும் போச்சு… இனி எந்த ஆம்புளபுள்ள… எந்த ராஜ்யத்தை ஆளப் போறான்….. இப்ப நீ மாலையை போட்டு மட்டமல்லாக்க படுத்தீங்க… என்று மதிலில் முட்டிக்கொண்டே ரத்தம் சொட்ட சொட்ட மயங்கினாள் சரசு….

கருத்துகள்